தமிழ்நாடு சட்டசபையின் 2024-ம் ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் கடந்த திங்கள் கிழமை (12ம் தேதி) தொடங்கியது. சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தன் உரையைத் தொடங்கிய போது, தேசிய கீதம் இசைக்கப்படவில்லை.
மேலும், உரையில் உண்மைத்தன்மை மற்றும் தார்மிக கருத்துகளில் முரண்பாடு இருப்பதாகக் கூறி, தமிழக அரசின் உரையைப் புறக்கணித்தார். வெறும் 3 நிமிடங்களில் தன் உரையை முடித்துக் கொண்டார். இதனால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இதையும் படிங்க : 2024 February 19 : இன்றைய ராசி பலன்!!
கடந்த முறை தமிழக அரசு வழங்கிய உரையில் சிலவற்றை நீக்கியும் சேர்த்தும் வாசித்திருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இதனால், அவர் உரையை நீக்க தீர்மானம் கொண்டு வந்தது திமுக அரசு. எனவே, ஆளுநர் அதற்கு எதிர்ப்புப் தெரிவித்து அவையைவிட்டு வெளியேறினார்.
இந்த நிலையில், இந்த ஆண்டு சட்டப் பேரவையில் ஆளுநர் தன் உரையைத் தொடங்கிய போது, தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்றும்,
தமிழக உரையில் உண்மைத் தன்மை மற்றும் தார்மிக கருத்துகளில் முரண்பாடு இருப்பதாகக் கூறி உரையை புறக்கணித்து அவையைவிட்டு வெளியேறினார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று (19.02.24) நடப்பு ஆண்டுக்கான தமிழக பட்ஜெட், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார் கவர்னர் ஆர்.என்.ரவி.
மேலும், இன்று முதல் 4 நாட்கள் பயணமாக டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : மாணவர்களுக்கும் மாதம்தோறும் ரூ.1,000 திட்டம் – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!
தொடர்ந்து அவர் வருகிற 22ம் தேதி டெல்லியில் இருந்து சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியின் இந்த திடீர் டெல்லி பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.