தேசத் தந்தையைப் பற்றி அவதூறு பரப்பும் ஆளுநரின் மலிவான போக்கால் குடியரசு தின நிகழ்வு அழைப்பை நிராகரிக்கிறோம் என்று இந்தியக் கம்யூ.கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு தினம் என்பது ஜனவரி 26, 1950 அன்று நிகழ்ந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூரும் ஒரு தேசிய விழாவாகும் . இது ஆண்டுதோறும் ஜனவரி 26 அன்று கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 26 அன்று 75வது இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக நாடு தயாராகி வருகிறது. இதற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
குடியரசு தினத்தன்று மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் வைத்து தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குடியரசு தின நிகழ்வு அழைப்பை நிராகரிப்பதாக இந்தியக் கம்யூ.கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியக் கம்யூ.கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குடியரசு தின நிகழ்வு அழைப்பு :
“நாளை மறுநாள் (26.01.2024) நடைபெறும் குடியரசு தின நிகழ்வில் பங்கேற்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் மாளிகை அழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இதையும் படிங்க : தேசபக்தி இல்லாத பாசிச இயக்கம் பா.ஜ.க – அழகிரி!!
அதேசமயம் நாட்டின் விடுதலை போராட்ட வரலாற்றை புரட்டி பேசுவதும்,
அறிஞர் உலகம் ஒரு ஆயிரம் ஆண்டில் மனித சமூகம் கண்டறிந்த பேரறிவாளர் காரல் மார்க்ஸ் என்று ஏற்றுக் கொண்ட நிலையில் அவரை சிறுமைப்படுத்தி பேசுவதும்,
நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் தலைமை சாரதியாக திகழ்ந்து, தேசத் தந்தை என ஏற்றுக் கொள்ளப்பட்ட மகாத்மா காந்தி குறித்து அவதூறு பரப்புவதுமான மலிவாக செயல்படும் ஆர்.என்.ரவியின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
இதையும் படிங்க : Keelakarai ஜல்லிக்கட்டு : 10 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம்
இதனால், அவரது அழைப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது.
கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் வழக்கம் போல குடியரசு தின நிகழ்வுகள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.