குரங்கு காய்ச்சல்: கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் பரவி வருகிறது.இந்த வகை காய்ச்சலில் இதுவரை 53 பேர் பாதிக்கப்பட்டு,இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில்,உத்தர கன்னடா, ஷிவமொக்கா, சிக்கமகளூரு மாவட்டங்களில், குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் 154 பேருக்கு பரிசோதனை செய்த நிலையில், உத்தர கன்னடாவில் ஒருவருக்கும், சிக்கமகளூருவில் இருவருக்கும் என 3 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
ஏற்கனவே 38 பேர் குரங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,மேலும் மூன்று பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
இதையும் படிங்க: 12th Public Exam-செய்முறைத் தேர்வு இன்று முதல் தொடக்கம்!
இந்நிலையில் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய்க்கு இதுவரை 18 வயது இளம்பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
குரங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. இதேபோன்று, கேரள மாநிலத்தில் கர்நாடக எல்லையோரம் உள்ள மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Metro Works – சென்னையில் போக்குவரத்து மாற்றம்
இந்நிலையில், கர்நாடக எல்லை பகுதியில் அமைந்துள்ள ஈரோடு, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு, தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
அதில், “காய்ச்சலால் பாதிக்கப்படுவோரிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,
இந்த காய்ச்சல் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: TN Assembly |அரசின் உரையை படிக்க மறுத்த R.N. ரவி!
அதுமட்டுமின்றி , மக்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளது .
மேலும் ,வனப்பகுதிக்குள் கால்நடைகள் செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளை தினமும் சுத்தம் செய்தல் வேண்டும்.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1756920218432213473?s=20
கால்நடை கூடாரங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்” என்றும் ,கால்நடைகளை பாதுகாப்பாக வழக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 4 மாவட்ட மக்களும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என கூறியுள்ளனர்.