கொடூர பின்னணி : கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயற்கை நுண்ணறிவு துறை சார் நிறுவனத்தை நடத்தி வரும் சுசானா சேத் என்ற பெண்,
செயற்கை நுண்ணறிவு துறையில் உலகின் டாப் 100 வல்லுநர்கள் பட்டியலில் ஒருவர்.
கொல்கத்தாவை சேர்ந்த இவர் கோவாவுக்கு தன்னுடன் தனது 4 வயது மகனை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஹோட்டலில் ரூம் போட்டு தங்கியுள்ளார்.
அப்போது, ஞாயிற்றுக்கிழமை அன்று ஹோட்டல் ரூமிலேயே வைத்து தனது மகனை தலையணையால் அமுக்கி கொலை செய்த அவர்,
மறுநாள் காலை திங்கள் கிழமை அந்த சடலத்தை சூட்கேஸில் அடைத்து வைத்து, ஹோட்டலையும் காலி செய்துவிட்டு டாக்ஸியில் பெங்களூருக்கு புறப்பட்டுள்ளார்.
தப்பிச் செல்லும் வழியில் டாக்ஸியில் முன்சீட்டில் உட்கார்ந்துள்ளார்.
டிரைவரிடம் AC-யை அதிகமாக வைக்க சொல்லி விட்டு, குழந்தையின் சடலத்திலிருந்து வாடை வரக்கூடாது என்பதற்காக காரில் சென்ட் அடித்து கொண்டே பயணித்துள்ளார்.
இதனிடையே கர்நாடகா போலீசாரின் துரித நடவடிக்கையால் கைது செய்யப்பட்டார் சுசானா.
கொடூர பின்னணி : முதல் கட்ட விசாரணையில், கடந்த 2010-ம் ஆண்டு சுசானா சேத்துக்கும் அவரது கணவர் வெங்கட்ராமனுக்கும் திருமணம் நடைபெற்றது. வெங்கட்ராமன், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
இந்த தம்பதிக்கு 2019-ம் ஆண்டு பிறந்த ஆண் குழந்தைக்கு சின்மய் என பெயரிட்டுள்ளனர்.
ஒரே கம்பெனியில் வேலை பார்த்து வந்த கணவன்-மனைவி இடையே 2020-ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இந்த வழக்கில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் தனது மகன் சின்மய்யை நேரில் சந்தித்து பேச வெங்கட்ராமனுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. ஆனால் இதில், சுசானா சேத்க்கு விருப்பமில்லை.
இந்த சூழலில், வேறு வழியில்லாமல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெங்கட்ராமன் தன்னுடைய மகனிடம் செல்போனில் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார்.
அதன்படி, கடந்த 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, வெங்கட்ராமன் தன்னுடைய மகனிடம் பேச, சுசானா சேத்தின் செல்போனுக்கு வீடியோ காலில் அழைத்துள்ளார். ஆனால், சுசானா சேத், மகனிடம் போனை கொடுக்காமல் மறுத்துள்ளார்.
வெங்கட்ராமன் மீண்டும் மீண்டும் விடாமல் போன் செய்து கொண்டேயிருந்த நிலையில், மற்றொருபக்கம் தன் அப்பாவிடம் பேச வேண்டும் என்று சிறுவனும் அழுதுகொண்டே இருந்திருக்கிறான்.
இதனால், ஆத்திரமடைந்த சுசானா புத்தி தடுமாறி கணவர் மேல் இருந்த வன்மத்தை போக்க சிறுவனுக்கு அளவுக்கு அதிகமாக இருமல் மருந்து கொடுத்து மயங்கி விழுந்ததுமே கழுத்தை நெரித்துள்ளார்..
குழந்தைக்கு மூச்சு திணறி மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியுள்ளது அப்போதும் ஒரேயடியாக இறுக்கி பெற்ற மகனின் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
https://x.com/ITamilTVNews/status/1745692474079846572?s=20
இதுகுறித்த வாக்குமூலத்தில் டைவர்ஸ் ஆகிவிட்டால், தன்னுடைய மகன் கணவருக்கு கிடைக்கக்கூடாது என்பதற்காக தான் குழந்தையை கொன்றதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், மகன் இறந்த தகவலை போலீசார் வெங்கட்ராமனுக்கு தெரிவித்த நிலையில்,
இந்தோனேசியாவிலிருந்து நேற்று முன்தினம் இரவு சித்ரதுர்கா அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த வெங்கட்ராமனிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
தன் குழந்தையின் சடலத்தை பார்த்ததுமே கதறி கதறி அழுத வெங்கட்ராமனை பார்த்து நிலைகுலைந்து போனது கர்நாடகா!