முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர் என்பதில் மாற்று கருத்தில்லை என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்த கரையில் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநில நிர்வாகிகள்,பாராளுமன்ற வேட்பாளர்கள் மற்றும் மாவட்டத்தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலை , தமிழ்நாடு தேர்தல் இணை பொறுப்பாளர் திரு.சுதாகர் ரெட்டி மத்திய இணை அமைச்சர் திரு.எல்.முருகன் மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,”முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர் என்பதில் மாற்று கருத்தில்லை .
இதையும் படிங்க: ” இந்துத்துவ தலைவர் ஜெயலலிதா -”அண்ணாமலைக்கு சசிகலா பதிலடி!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ஒரு இந்துத்துவ தலைவர் தான். ஆனால் இந்த கருத்தை அதிமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று இதை எதிர்க்கலாம் ஆனால் அம்மா இருக்கும் பொழுது இன்று எதிர்ப்பவர்கள் யாரும் அன்றைய தினத்தில் எதிர்க்கவில்லை.
மேலும் குடமுழுக்கு விழா நடத்துவது கரசேகர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது குறிப்பாக கர சேவையை சுட்டிக்காட்டி பாஜக ஆட்சி கவிழ்க்கப்பட்ட பொழுது,” இது தவறு என்று குரல் எழுப்பியவர் ஜெயலலிதா தான் என்று தெரிவித்தார்.
குறிப்பாக ராமர் கோவில் தேவை என்று தனது தொண்டர்களிடம் கையெழுத்து வாங்கி அனுப்பியவர் அவர், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று ஆதரவு தெரிவித்த இந்துத்துவா தலைவர்கள் முக்கியமானவர் ஜெயலலிதாவும் ஒன்று. மேலும் அனைத்து கோவில்களிலும் அன்னதான சேவையை தொடங்கியவர் ஜெயலலிதா.
தொடர்ந்து பேசிய அவர் ராமர் செய்த திட்டத்தை திமுக மற்றும் திராவிட கட்சிகள் எதிர்த்த போது அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் ஜெயலலிதா தான் என்று தெரிவித்தார்.
மேலும் குறிப்பாக சொல்லப்போனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று இருந்திருந்தால் ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டு நமது இந்தியாவின் பல நூறு ஆண்டு கால கனவை இன்று நினைவாகி இருக்கிறது என்ற கருத்தை பதிவு செய்திருப்பார் என்று தெரிவித்தார்.