டெல்லியில், பெண் ஒருவரை பலாத்காரம் செய்த சம்பவத்தில் அந்த பெண்ணிற்கு பிறந்த குழந்தையை தங்களிடம் ஒப்படைக்க கோரி பலாத்காரம் செய்த குற்றவாளியின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் (supreme court) வழக்கு தொடர்ந்து உள்ள சம்பவம் வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது.
டெல்லியில், பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு குழந்தை பிறந்து உள்ளது. இந்நிலையில், அந்த பெண்ணை பலாத்காரம் செய்த குற்றவாளியின் பெற்றோர் அந்த பெண்ணிற்கு பிறந்த குழந்தை தங்களுக்கு வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் (supreme court) வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததும், நீதிபதி பி.எஸ். நரசிம்மா பலாத்கார குற்றவாளியின் பெற்றோர் தரப்பினரிடம் இந்த வழக்கு குறித்து “அந்த குழந்தை உங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இல்லையா? குழந்தையை பெற்றெடுத்த அந்த தாய் இல்லையென்றால் குழந்தை எங்கிருந்து வந்திருக்கும்? என்று கேள்வி எழுப்பினார்.
நீதிபதி கேட்ட கேள்விக்கு குற்றவாளியின் பெற்றோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, அது அந்த குழந்தையின் விருப்பம் சார்ந்தது நீதிபதி அவர்களே என பதிலளித்து உள்ளார்..
அதையடுத்து, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், என்ன மாதிரியான மனுக்கள் எல்லாம் இந்த கோர்ட்டுக்கு வருகின்றன? இந்த வழக்கில் ஹேபியஸ் கார்பஸ் மனு எப்படி தாக்கல் செய்யப்படுகிறது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு பற்றிய விவரங்கள், வழக்கறிஞர் மற்றும் நீதிமன்ற அமர்வுக்கான இந்திய சட்ட செய்தி வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.