முதல்வர் மடல் | “இன்று உரிமை முழக்கம்! நாளை வெற்றி முழக்கம்!” எனக் குறிப்பிட்டு தி.மு.கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
அந்த மடலில்,நாடாளுமன்றத் தேர்தல் களத்தை எதிர்நோக்கித் தமிழ்நாடு முழுவதும் உள்ள 68 ஆயிரத்து 36 வாக்குச்சாவடிகளுக்கும் பி.எல்.ஏ-2 எனப்படும் பாகமுகவர்களை நியமித்து,
பூத் கமிட்டிகளை அமைத்து, ஒரு வாக்குச்சாவடிக்கு சராசரியாக 10 பேர் என்ற அளவில் ஏறத்தாழ 6 இலட்சத்து 80 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்களாம் முன்கள வீரர்களைக் கொண்டுள்ள இயக்கம் தி.மு.கழகம்.
அவர்களுக்கு களப்பயிற்சியும் இணையத்தளப் பயிற்சியும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில்,
தேர்தல் களத்தை எதிர்கொள்ளும் வியூகத்தைக் கற்றுத்தரும் வகையில் கழக முன்னணியினரின் சிறப்புரையுடன் இந்தப் பொதுக்கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள தொகுதிப் பார்வையாளர்கள் அவரவர் தொகுதிக்குட்பட்ட பூத் கமிட்டியினர் கலந்துகொள்வதை உறுதிசெய்து, கண்காணித்திட வேண்டும்.
இதையும் படிங்க: MY V3 Ads APP-நிறுவனம் மீது அடுக்கடுக்காக புகார்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!
மாவட்டக் கழகச் செயலாளர்களும் பொறுப்பு அமைச்சர்களும் அவரவர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து,
சரியான முறையில் திட்டமிட்டு, கழக உடன்பிறப்புகளுடன் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொள்ளும் வகையில் இந்தப் பொதுக்கூட்டங்கள் அமைந்திட வேண்டும்.
மேடை அமைப்பு, விளம்பரங்கள், ஒலி-ஒளி அமைப்பு, இருக்கை வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் ஆகியவை குறித்து தலைமைக் கழகம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதை மனதிற்கொண்டு,
கட்டுக்கோப்பான முறையில் கூட்டத்தை நடத்தி, மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து, அவர்களின் பேராதரவுடன் வெற்றியை அறுவடை செய்வதற்கு ஆயத்தமாக வேண்டும்.
இரண்டரை ஆண்டுகால திராவிட மாடல் அரசின் அடுக்கடுக்கான சாதனைகளையும், பத்தாண்டுகால பா.ஜ.க ஆட்சியின் தொடர்ச்சியான துரோகங்களையும் -மோசடிகளையும்
துண்டறிக்கைகளாக அச்சிட்டு வீடு வீடாகச் சென்று மக்களிடம் வழங்கி, பொதுக்கூட்டத்திற்கு அழைக்கும் பணியைப் பல தொகுதிகளிலும் மேற்கொண்டிருப்பதை அறிகிறேன்.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1757702103999365441?s=20
அதுபோல வாய்ப்புள்ள வகையில் எல்லாம் உரிய முறையில் விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. மற்றவர்களும் இத்தகைய பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் குறித்து கழகத்தினருக்குப் பயிற்சி தரும் வகையிலும், பொதுமக்களுக்கு பா.ஜ.க. – அ.தி.மு.க. மறைமுகக் கூட்டாளிகளின் நேரடித்
துரோகங்களை அம்பலப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ அமைந்திட வேண்டும்.
அதுதான், பாசிசத்தை வீழ்த்தி, ‘இந்தியா’ வென்றிடுவதற்கான களத்தை அமைத்துத் தரும்.2022-ஆம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், ‘நாற்பதும் நமதே.. நாடும் நமதே’ என்ற முழக்கத்தை முன்வைத்தேன்.
அது தமிழ்நாட்டில் மட்டுமின்றி, 2023-இல் இந்திய ஒன்றியம் முழுவதும் பரவி, இந்தியா கூட்டணிக்கு வழிவகுத்துள்ளது. இன்றைய நம் உரிமை முழக்கமே நாளைய வெற்றி முழக்கமாக அமைந்திடும்.
நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும். உரிமையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும்!” எனத் (முதல்வர் மடல்) தெரிவித்துள்ளார்.