மூடேற்றும் முருங்கைக்காய் துவையல்..
நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தக்கூடிய முருங்கை காயை கொண்டு சாம்பார், காரக்குழம்பு, அவியல், பொரியல், சூப் என சமைத்து சலித்துப்போய் இருப்போம். அதனால், கொஞ்சம் டிஃப்ரெண்ட்டாக முருங்கைக்காய் துவையல் செய்து அசத்தலாம்.
5 நிமிடத்தில் ரெடியாகிவிடும் காரசாரமான முருங்கைக்காய் துவையல் சுவையாக செய்வது எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எண்ணெய் – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 2
உளுந்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
குழம்பு கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் -1
தக்காளி பழம் – 1 (தக்காளி பழத்திற்கு பதில் சிறிய துண்டு புளியையும் சேர்க்கலாம்)
முருங்கைக்காய் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை விளக்கம் :
முதலில் முருங்கை காய்களை கழுவி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : நடிகை ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்ய போறாங்களா?
பின்னர், மற்றொரு பக்கம் ஒரு வானலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் இரண்டு காய்ந்த மிளகாய், ஒரு பச்சை மிளகாய், உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனை தாளித்த எண்ணெயோடு சேர்த்து அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மீண்டும் அதே வானலியில் ஒரு துளி எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து சுருள வதக்க வேண்டும்.
இப்போது அதனையும் அதே மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது தனியாக வேகவைத்து எடுத்து வைத்துள்ள முருங்கை காய்களை கீறி அதனுள் இருக்கும் சதை பகுதியை மட்டும் ஒரு ஸ்பூனால் எடுத்து தனி ஒரு சிறிய பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும்.
இதையும் படிங்க : பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும்! – முதலமைச்சர் பகவந்த் மான்
இப்பொழுது சேகரித்த முருங்கைக்காய் சதைப்பகுதியையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து அரைத்து எடுத்தால் சுவையான மனமான மூடேற்றும் முருங்கைக்காய் துவையல்.. ரெடி..
இந்த துவையல் சாம்பார்.. ரசம்.. என அனைத்திற்கும் காரசாரமான காமினேஷனாக இருக்கும்.