வடலூர் வள்ளலார் சக்தியஞான சபை பெருவெளியில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கப்பட்டால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என அன்புமணி இராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் மேற்கு மாவட்டத்திற்கு உள்ளடக்கிய விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளின் தேர்தல் களப்பணியாளர்கள் கூட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்றது.
முன்னதாக விருத்தாச்சலத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் புதிதாக ஏழு மாவட்டங்கள் பிரிக்க வேண்டும், அதில் கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருத்தாசலத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்ட அறிவிக்க வேண்டும்.
வடலூர் வள்ளலார் சக்தியஞான சபை பெருவெளியில் தமிழக அரசு வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைப்பதை கடுமையாக எதிர்க்கிறோம். மீறி சர்வதேச மையம் உருவாக்கப்பட்டால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.
நெய்வேலி என்எல்சி என்றாலே பிரச்சனை. சமீபத்தில் நடைபெற்று முடிந்த, சுரங்க இயந்திரங்களுக்கான தொழிற்பயிற்சிகான எழுத்து தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன.
இதையும் படிங்க : January 25TH 2024 : இன்றைய ராசி பலன்!!
அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களில் 250 பேர் திமுகவை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
எனவே நடத்தப்பட்ட தேர்வினை ரத்து செய்துவிட்டு நீதி அரசர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். என்எல்சி நிறுவனம் திமுக சொத்தா??
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நடத்தியுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் நடத்த வேண்டும்.
நீட் தேர்வினை ஆட்சிக்கு வந்த உடனே முதல் கையெழுத்து போட்டு நீக்குவதாக திமுகவினர் கூறினார்கள். ஆனால் மூன்று வருடமாக நாடகம் மாடிக்கொண்டு இருக்கிறார்கள்
.
தமிழகத்தில் கஞ்சா தலை விரித்து ஆடுகிறது. திமுக அமைச்சரான ஏ.வா வேலு உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா தெரு தெருவாக விற்பனை நடைபெறுகிறது” என கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில்.. மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் மருத்துவர் கோவிந்தசாமி, செய்தி தொடர்பாளர் வினோபா பூபதி, மாநில மகளிர் அணி செயலாளர்கள் தமிழரசி,
சிலம்புச்செல்வி, மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், சண்.முத்துகிருஷ்ணன், செல்வ.மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.