வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 101 ரூபாய், அதிகரித்து 2,234 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது.
கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதன் காரணமாக சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு சிலிண்டர் விலை ரூ.101 அதிகரித்து ரூ.2,234க்கு விற்பனையாகிறது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாடு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஓராண்டில் ரூ.770 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.101.50 உயர்ந்திருப்பதால் உணவகங்களில் உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.