மகளிருக்கான உரிமைத் தொகை ரூ.1000 வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத்(1000 rupees) தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது வழங்குவார்கள் என்று குடும்பத் தலைவிகள் இடையே பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது.
அந்த வகையில்,குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை(1000 rupees )வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் நடைமுறை படத்தப்பட உள்ளது.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், சிறு தொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர் உள்ளிட்டோர் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை தொகை வழங்குவது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதித்துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.