மெக்சிகன் நாடாளுமன்றத்தில் மூன்று விரல்கள் கொண்ட 1,000 ஆண்டுகள் பழமையான வேற்றுகிரகவாசிகளின் உடல்கள், காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து UFO நிபுணர் ஜெய்ம் மௌசன் என்பவர் விளக்கம் அளித்துள்ளார்..
“மெக்சிகன் காங்கிரஸில் 2 எனக் கூறப்படும் “மனிதர் அல்லாத” உடல்களை முன்வைத்த அவர், இவை 1,000 ஆண்டுகள் பழமையானவை என்றும் மனிதர்களிடமிருந்து 30% வித்தியாசமான மரபணு அமைப்பைக் கொண்டுள்ளன என்றும் கூறினார்.
பெருவில் உள்ள ஒரு சுரங்கத்தில் தான் இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த உடல்கள் 3 விரல்களுடன் கூடிய கைகள், நீளமான மண்டை ஓடுகள் மற்றும் இலகுரக எலும்புகள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த உயிரினங்களில் ஒன்று கருவுடன் கூடிய முட்டைகளை கொண்டுள்ளதாகவும், காட்மியம் மற்றும் ஆஸ்மியம் உலோகங்களால் செய்யப்பட்ட உள்வைப்புகள் இவற்றில் இருந்தது.
அசாதாரணமான கூற்றுடன் காணப்படும் இந்த உடல்கள் உண்மையில் 1,000 ஆண்டுகளுக்கும் பழமையானவை. இந்த உடல்கள் ஒரு மனித உருவத்தை போல் உள்ளன. ஆனால் இதில் காணப்படும் உள்ளிழுக்கும் கழுத்து மற்றும் நீளமான மண்டை ஓடுகள் போன்ற தனித்துவமான அம்சங்கள் ஒரு பறவையை போன்ற “பண்புகள்” கொண்டதாக உள்ளது.மேலும், இவை இலகுரக எலும்புகள் மற்றும் பற்கள் இல்லாதவைகளாக உள்ளது.
இந்த உடல் மாதிரிகள் நமது நிலப்பரப்பு பரிணாமத்தின் ஒரு பகுதி அல்ல என்பது உறுதி. இவை யுஎஃப்ஒ இடிபாடுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்கள் இல்லை. இவை டயட்டம் சுரங்கங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் புதைபடிவமாக்கப்பட்டன.
இந்நிலையில், இவர்கள் வேற்றுகிரகவாசிகளா? இல்லையா? என்பது எங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.