தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாற்றம் அடைந்து பெரிதும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது.
இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து அதனை பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடை பெற்றன.
பின்னர் கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புக்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உருமாறிய கொரோனா வகையான ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவின் பல மாநிலங்களிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
ஒமைக்ரான் பரவி வருவதால் பொதுத் தேர்வு கடந்த ஆண்டைபோல ரத்தாகி விடுமோ என்ற அச்சம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நேரடி பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால் நேரடி பொதுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தார். தமிழகத்தில் ஒரே நாளில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 175 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் அன்பில் தெரிவித்துள்ளார்.