11, 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீட்டு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது.
2022-23 ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கியது. 3 வாரம் நடைபெற்ற இந்த தேர்வுகள் ஏப்ரல் 5ம் தேதி முடிவு பெற்றது. 7,73,688 பேர் 11ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதனைத் தொடர்ந்து 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியானது. இதில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றனர்.
அதேபோல் கடந்த மே மாதம் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 96.38 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து 11, 12ம் வகுப்பு போதுத் தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்காக துணைத் தேர்வு நடத்தப்பட்டது. ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை நடத்தப்பட்ட துணை தேர்வை கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் எழுதினர்.
இந்த நிலையில் 11, 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. மறுகூட்டல், மறுமதிப்பீட்டு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது.
இந்த தேர்வு முடிவுகளை தேர்வர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை கொடுத்து, http://tnresults.nic.in , http://dge.tn.nic.in ஆகிய இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
அதேபோல் மாணவர்கள் பதிவு செய்துள்ள அவர்களின் பெற்றோர்களின் போன் எண்ணுக்கும் ரிசல்ட் எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்படும். அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் மாணவர்கள் ரிசல்ட்டை தெரிந்து கொள்ள முடியும்.