ஜார்ஜியாவில் உள்ள உணவகத்தில் விஷவாயு தாக்கியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்த உள்ளது.
கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக, இந்தியர்கள் ஏராளமானோர் செல்லும் நாடுகளில் ஒன்று ஜார்ஜியா . இங்கு மருத்துவம் உள்பட பல்வேறு படிப்புகளில் சேர ஏராளமான இந்தியர்கள் ஆண்டு தோறும் சென்று வருகின்றனர் .
இந்நிலையில் இங்குள்ள உணவகம் ஒன்றில் விஷவாயு தாக்கியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்த உள்ளது.
ஜார்ஜியாவில் உள்ள குதாவ்ரி பகுதியில் மலையின் மீது ரிசார்ட் அமைந்துள்ளது. இந்த ரிசார்ட்டில் திடீரென கார்பன் மோனாக்சைடு விஷ வாயு பரவியது. இதனால் அங்கிருந்த 12 பேர் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் .
உணவகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால், கார்பன் மோனாக்சைடு வாயு வெளியாகி உயிரிழப்பு ஏற்பட்டதாக அப்பகுதி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.