சுனாமி பேரழிவில் சிக்கி மாயமான தனது மனைவியை 13 வருடங்களாக தேடி வரும் கணவரின் செயல் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது .
ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரழிவில் சிக்கி மாயமான தனது மனைவி யுகோவை 13 வருடங்களாக தேடி வருகிறார் ஜப்பானை சேர்ந்த யசுவோ என்ற நபர்.
Also Read : உணராமல் உளறும் எடப்பாடி பழனிசாமி – தி.மு.க எம்.பி ஆ. ராசா காட்டம்
வங்கி பணியாளரான யசுவோ , நீரில் மூழ்குவது குறித்து பயிற்சி பெற்று மனைவியின் உடைமைகளாவது கிடைக்குமா என தேடுவதாகவும், கடற்கரையின் அருகில் இருக்கும்போது மனைவியுடன் இருப்பது போல் தான் உணர்வதாகவும், இதைதவிர வேறு வழியில்லை எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஒருவர் போனால் இன்னொருவரை திருமணம் செய்துகொண்டு வாழும் இன்றைய அவரசக்கால உலகில் சுனாமி பேரழிவில் சிக்கி மாயமான தனது மனைவியை 13 வருடங்களாக தேடி வரும் கணவரின் செயல் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது .
தனது மனைவி இறந்திருக்க மாட்டார் என இன்று வரை உறுதியாக நம்பும் யசுவோ அவரை வாழ்நாள் முழுவதும் தேடி போவதாகவும் பேசியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.