இந்தியாவின் வடகிழக்கு மாவட்டங்களை மேம்படுத்த ரூபாய் 1,34,200 கோடி மதிப்பில் திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,வடகிழக்கு பிராந்தியத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசு வடகிழக்கு பகுதிகளில் ,74 ஆயிரம் கோடி மதிப்பிலான 20 ரயில்வேதுறை திட்டங்களுக்கு 58ஆயிரம் கோடி மதிப்பிலான சாலை பணிகள் நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்