Horrible accident in Bangladesh : வங்கதேசத்தில் லாரியுடன் பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாக்கா-குல்னா நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும், பிக்-அப் டிரக் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேரும், மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
இதையும் படிங்க : பாகிஸ்தானில் கனமழை : 39 பேர் பலி!!
உயிரிழந்தவர்களில் பயணிகள், ஓட்டுநர் மற்றும் பிக்-அப் டிரக்கின் ஓட்டுநர், ஓட்டுநரின் உதவியாளர் உட்பட மொத்தம் 15 பயணிகள் இருந்தனர்.
அதில், ஏழு பெண்கள், மூன்று ஆண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து, துணை ஆணையர் எம்டி கம்ருல் அஹ்சன் தாலுக்டர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் முகமது மோர்ஷெட் ஆலம் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வங்கதேச அரசு சார்பில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது Horrible accident in Bangladesh.
இதையும் படிங்க : ரூ.4 கோடி விவகாரம் – நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை?