வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் இந்திய கடற்படையால் ( Sri Lankan fishermen ) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ள நிலையில் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் இருந்து வருகின்றனர் . இந்நிலையில் தமிழக மீனவர்கள் யாரும் கடவுளுக்கு செல்லாததால் இந்த நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அந்நிய நாட்டைச் சேர்ந்த யாரும் இந்திய கடல் எல்லையில் ஊடுருவ கூடாது என்பதற்காக இந்திய கடற்படை நாள்தோறும் தீவிர ரோந்து பணியில் இறங்கியுள்ளது .
ஏற்கனவே கடற்கொள்ளையர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரர்களின் அத்துமீறல் அதிகாக இருந்து வரும் நிலையில் அணைத்து கடல் எல்லைகளிலும் பாதுகாப்பு மாற்றும் கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது .
Also Read : மக்களே உஷார் – தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட்..!!
இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்கரை அருகே இந்திய எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேரை இந்திய கடற்படை கைது செய்துள்ளது .
ரோந்து பணியின்போது சந்தேகத்திற்கிடமான வகையில் படகு இருந்ததால் அங்கு சென்ற இந்திய கடற்படை வீரர்கள் விசாரிக்கும்போது அந்த பக்கம் படகில் இருந்தவர்களும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பது தெரியன்வந்துள்ளது .
இதையடுத்து 14 மீனவர்கள் மற்றும் அவர்களது 5 படகுகளை நாகை கடலோர பாதுகாப்பு குழும ( Sri Lankan fishermen ) போலீசாரிடம் இந்திய கடற்படை அதிகாரிகள் நாளை ஒப்படைக்க உள்ளனர்.