தஞ்சாவூர் மாவட்டம் திருவைகாவூரில் கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற வலியுறுத்தி வன்னிய சமூகத்தினர் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.
இதனால் வன்னிய சமூகத்தினருக்கும் மாற்று சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இந்த மோதலில் பாதுகாப்பிற்காக அப்பகுதியில் குவிக்கப்பட்ட இரண்டு காவல்துறையினர் உட்பட சுமார் 12 பேர் படுகாயம் அடைந்தனர. இதனை அடுத்து அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 55 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் அப்பகுதி மக்களின் பாதுகாப்பை முன்னிட்டும், பிரச்சனை ஏற்படாமல் இருக்கும் வகையிலும் குறிப்பிட்ட பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு மறுஅறிவிப்பு வரும் வரை 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.