இன்று தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்கிறது. கடந்த ஜூன் மாதம் முதல் மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், அண்ணா நகர், அசோக் நகர், செம்பரம்பாக்கம், ஆவடி, திருநின்றவூர், குன்றத்தூர், மாங்காடு, திருவேற்காடு, வேலப்பன்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.