இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளின் நகரில் இன்று நடைபெற உள்ளது .
அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது . இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டப்ளின் நகரில் இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது .
சில நாட்களுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா,சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் , யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இந்த தொடரில் 2-ஆம் தர இந்திய அணி அயர்லாந்து அணியுடன் மல்லுக்கட்ட உள்ளது .
காயத்தால் நீண்ட நாள் ஓய்வில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது முழு ஆரோக்கியத்துடன் இருப்பதால் இந்த தொடரில் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நீண்ட ஓய்வுக்கு பின் சர்வதேச போட்டியில் விளையாட இருக்கும் பும்ராவுக்கு அயர்லாந்து தொடர் மிகவும் முக்கியமானது.
இந்த தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை வழிநடத்தும் பும்ரா அயர்லாந்து அணியை வீழ்த்த என்ன தந்திரத்தை கைவசம் வைத்துள்ளார் என்று தெரியவில்லை . ஆனால் உலககோப்பையை மனதில் வைத்து தனது ஒவ்வரு பந்தையும் வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
இந்நிலையில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.