பொங்கல் (pongal) சிறப்பு பேருந்துகளின் மூலம் நேற்று ஒரேநாளில் 2.17 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர்.
தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை பொங்கல் பண்டிகை. 4 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டிகையை, பெரும்பாலான மக்கள் கிராமங்களில் கொண்டாடுவார்கள்.
இதன் காரணமாக பணி நிமிர்ந்தம் காரணமாக வெளி ஊர்களில் தங்கி இருக்கும் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இவ்வாறு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை நாளை போகி பொங்கலுடன் தொடங்குகிறது.
இதையடுத்து சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வேலைக்காக சென்றவர்கள் பொங்கல் பண்டிகையை (pongal) கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று முன்தினம் இருந்தே சென்று வருகிறார்கள்.
பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நேற்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 4,706 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
https://x.com/ITamilTVNews/status/1746116316841558419?s=20
குறிப்பாகச் சென்னையில் மட்டும் கடந்த ஜன.12ம் தேதியிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அதே போல் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல 8,478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதோடு புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு வசதியாகக் கூடுதலாக மாநரக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் மக்கள் எவ்விதமான சிரமங்களையும் சந்திக்காமல் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று வருகிறார்கள்.
இதையும் படியுங்க : https://itamiltv.com/udhay-chief-minister-mk-stalin-denied-udhayanithi-stalin-deputy-minister-posting/
இவ்வாறு அடுத்த 3 நாட்களுக்கு 13,184 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளின் மூலம் நேற்று ஒரேநாளில் 2.17 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
இதுவரை 1,96,310 பேர் சிறப்பு பேருந்துகளில் செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.