தமிழகத்தை உலுக்கிய விஷச் சாராய விவகாரத்தில் ஏற்கனவே 5க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட 143 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர சம்பவத்தில் இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர் .
இந்நிலையில் இந்த குற்ற சம்பவத்தில் சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய தனிப்படை போலீசார் நேற்று சிவகுமார், கதிரவன் ஆகியோரை கைது செய்த நிலையில் தற்போது அய்யாசாமி மற்றும் தெய்வரா ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுமட்டுமின்றி இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மாதேஷ் உட்பட 5 பேரை தனிப்படை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.