சென்னையில் தந்தை மதுபோதையில் அதிவேகமாக ஆட்டோவை ஓட்டியதால் 2 வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடுத்த சேலையூர் அருகே தந்தையுடன் 2 வயது குழந்தை பிரதீப் ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது தந்தை அருண் ஆட்டோவை வேகமாக ஒட்டியதால் 2 வயது குழந்தை பிரதீப் நிலை தடுமாறி ஆட்டோவில் இருந்து தவறி விழுந்துள்ளான்.
அப்போது அந்த சாலை வழியாக சென்ற லோடு வான் குழந்தை மீது மோதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சம்வ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்தவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், குழந்தையின் தந்தை அருண் மதுபோதையில் அதிவேகமாக ஆட்டோ ஒட்டியதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தந்தையின் தவறால் 2 வயது குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.