வங்கதேசத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது
வங்கதேசத்தின் கிஷோர்கஞ்சில் இருந்து தலைநகர் டாக்கா நோக்கி சென்ற பயணிகள் ரயில் நேற்று மாலை 4:15 மணிக்கு பைராப் ரயில் நிலையத்தை கடந்த போது, அதே பாதையில் பின்னால் வந்த சரக்கு ரயில், அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், பயணிகள் ரயிலின் சில பெட்டிகளும், சரக்கு ரயிலின் சில பெட்டிகளும் தடம்புரண்டது. இந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் பலர் காயமடைந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பைரப் நிர்வாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்திருந்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இந்த விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததை கண்டறிந்தனர்.