தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தியில் கூறிருப்பதாவது:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 17ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வெள்ளி இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (15.12.2023 – 17.12.2023) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி ஆகிய 20 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.