மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன் (2024 February 3)
மேஷம் :
எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் கிடைக்கும்.
சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.
ரிஷபம் :
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். கணவன் – மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படும்.
முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
இதையும் படிங்க : பிப்ரவரி 3 : தங்கம் விலை.. இன்றைய நிலவரம்?
மிதுனம் :
தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு இன்று கிடைக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
மகாவிஷ்ணு வழிபாடு நற்பலன்களைக் கூடுதலாகத் தரும்.
கடகம் :
மிகவும் உற்சாகமான நாள். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி ஒன்று சேர்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும்.
தட்சிணா மூர்த்தி வழிபாடு நினைத்ததை நிறைவேற்றி மகிழ்ச்சி தரும்.
சிம்மம் :
சங்கடங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
அம்பிகை வழிபாடு நன்மை தரும்.
கன்னி :
புதிய முயற்சிகளை தொடங்கலாம். வெற்றி உங்கள் வசமாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லைகள் நீங்கும்.
பெருமாள் வழிபாடு நன்மை தரும்.
துலாம் :
தெய்வ பக்தி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
விநாயகப்பெருமான் வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம் :
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாளாக எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும்.
பைரவர் வழிபாடு நன்மை தரும்.
தனுசு :
மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அந்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை மேலோங்கும்.
ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
மகரம் :
இன்று பணப் புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடியும். வியாபாரத்தில் பங்கு தாரர்களால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.
குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
கும்பம் :
பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறருக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கக் கூடும். வியாபாரத்தில் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.
இதையும் படிங்க :அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை!
மீனம் :
நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத் தான் இருக்கும்.
மகாலட்சுமி வழிபட நல்ல திருப்பம் ஏற்படும் (2024 February 3).