அமெரிக்காவின் லூயிஸ்டனில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 22 பேர் பரிதாமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பட்டியதியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மெய்னி மாகாணத்தில் உள்ள லீவின்ஸ்டன் என்ற நகரில், பார் மற்றும் வணிக வளாகத்தில் மர்மநபர் ஒருவர் தீடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பரிதாமாக உயிரிழந்துள்ளனர் மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தலைமறைவாக உள்ள அந்த மர்மநபர் யார் எதற்காக இந்த தாக்குதலை அப்பாவி மக்கள் மேல் நடத்தினார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.