உலக புகழ் பெற்ற மதுரை மாநகரத்தில் உள்ள விமான நிலையத்தில் விரைவில் 24 மணி நேர சேவை தொடங்கப்படும் என விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்துள் உள்ள பல புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது மதுரை மாநகரம் . பண்டைய கால தமிழர்களால் தமிழ் சங்கம் வளர்த்த மாநகரம் உள்ளிட்ட பல பெருமைகளை உள்ளடக்கிய இம்மாநகரத்தில் விரைவில் 24 மணி நேர விமான சேவை வழங்கப்படும் என விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
அக்டோபர் இறுதிக்குள் 24 மணி நேரமும் செயல்படும் விமானநிலையமாக மதுரை மாறும் என்ற அறிவிப்பினை விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.
Also Read : சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதித்தது ஆஸ்திரேலியா அரசு..!!
மதுரை விமான நிலையம் தற்போது வரை இரவு 10.00 மணி வரை மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில் மதுரையில் இரவு நேர விமான சேவையை தொடங்க விமான நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி மதுரை விமான நிலையத்தில் விரைவில் 24 மணி நேரமும் செயல்படும் என்பதால் பாதுகாப்பு பணிக்கு கூடுதல் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் வரவழைக்கப்படுவார்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.