ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி அன்று இரவு பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது . இந்த பயங்கர விபத்தில் ரயில்களில் பயணித்த ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 295 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஒடிசா அரசு அதிர்ச்சி தரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது .
இந்நிலையில் தற்போது இந்த பயங்கர ரயில் விபத்து குறித்து மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது:
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்த 295 பேரில் 29 பேரின் சடலங்கள் அடையாளம் காண முடியாத நிலையில் புவனேஸ்வர் எய்ம்ஸில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது .
டெல்லியில் இருந்து இறுதிகட்ட DNA மாதிரிகளின் முடிவுகள் விரைவில் வந்துவிடும் என்றும் அதன் அடிப்படையில் சில உடல்கள் அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதுவரை உரிமை கோராமல் மீதமிருக்கும், உடல்களை தகனம் செய்வது குறித்து ஒடிசா மாநில அரசே முடிவெடுக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது .
உலகையே உலுக்கிய இந்த கோர சம்பவத்தை மெல்ல மெல்ல மறக்க நினைக்கும் இந்த தருணத்தில் 29 பேரின் சடலங்கள் இன்று வரை அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளதாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது .