சுற்றுலா பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து சுற்றுலா வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் ராமநாதபுரத்தில் இருந்து வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. ராமேஸ்வரம் மண்டபம் முகாம் அருகே வந்த போது, வேன் மற்றும் சுற்றுலா வாகனம் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் விபத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, கடந்த இரு நாள்களுக்கு முன் மதுராந்தகம் அடுத்த தொழுப்பேடு அருகே பயங்கர விபத்துக்குள்ளானதில் 7 உயிரிழந்த நிலையில், மீண்டும் நாமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சுற்றுலா பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.