நெல்லையில் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருநெல்வேலி நகரின் திருநகர் பகுதியில் அமைந்துள்ள டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 9ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 3 மாணவர்களும் உயிரிழந்தனர்.
விளையாட்டு பாடவேளையில் மைதானத்தில் விளையாட சென்ற போது கழிவறை சுற்று சுவர் இடிந்து விழுந்ததால் இந்த சோக விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் இந்த விபத்தில் மேலும் இரண்டு மாணவர்கள் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் உயிரிழந்த சன்பவம் குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளி முன் குவிந்துள்ளனர். அதனால் அப்பகுத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நெல்லையில் அரசு உதவிபெறும் பள்ளியான டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்றும் ஒரு மாதத்துக்கு மேலாக நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் கட்டிட ஸ்திரத் தன்மை பாதிப்புக்குள்ளானதாகவும், அதனை உரிய நேரத்தில் ஆய்வு செய்திருந்தால் இந்த உயிரிழப்பை தவிர்த்திருக்க முடியும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.