தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளதோடு சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஏரி, குளங்களும் நிரம்பியுள்ளன.
மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகளும் முழு கொள்ளளவை வேகமாக எட்டி வருகின்றன .இந்நிலையில் தென்காசி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனையடுத்து ஆற்றோரப்பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொது மக்கள் ஆறுகளுக்குச் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.