தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் சீன உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரசின் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு உலக நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஓமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வுகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று திருச்சி விமானநிலையத்திற்கு ஆய்வுக்காக சென்றிருந்தார். அப்பொழுது, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வந்த கார் தடுப்புக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளாகியது. ஆனால், அதிஸ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.