கொடைக்கானல் அருகே கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடைக்கானலில் மேல்மலையில் உள்ள கீழ் கிளாவரை கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக செருப்பன் ஓடையில் இருந்து குழாய் மூலம் நீர் வராததால், கிராம மக்கள் சிலர் வனப்பகுதிக்குள் சென்று ஆய்வு செய்துள்ளனர் .
Also Read : செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் அபார சாதனை படைத்த இந்திய அணி..!!
அப்போது கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கொடைக்கானல் அருகே உள்ள வனப்பகுதியில் நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக அதிகாரிகள் நாளை ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பக வந்தரேவு வனச்சரகர், புவியியல் தொழில்நுட்ப உதவி இயக்குநர், தீயணைப்புத் துறை, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நாளை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. .