தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு எவ்வளவு தெரியுமா? – சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஏற்கனவே 3 பேர் குணமடைந்த நிலையில் மேலும் 9 பேர் ஒமிக்ரான் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

மேலும் நட்சத்திர விடுதிகளில் புத்தான்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வரும் அனைவரும் 7 நாள் கட்டாயம் தனிமையில் இருப்பது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார். ஒமிக்ரான் பாதிப்பை உறுதி செய்ய 39 பேரின் சளி மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

Total
0
Shares
Related Posts