ராஜ்கோட்டில் நடைபெறும் (3rd Test Match ) 3வது டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலாக்காக வைத்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் டெஸ்ட் தொடரில் தீவிரமாக விளையாடி வருகிறது .
இதுவரை இருக்கும் நிலவரத்தின் படி இந்திய – இங்கிலாந்து 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.
இதையடுத்து இந்த இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த (பிப்ரவரி 15) தேதி ராஜ்கோட்டில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் அறிமுக வீரராக சர்ஃபராஸ் கான் களமிறங்கினார். முதல் போட்டியிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃபராஸ் கான் 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் முதன்முறையாக அறிமுகமாகியிருக்கும் சர்பராஸ் கான் தற்போது மிகவும் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.
இதுமட்டுமின்றி இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளனர்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜாக் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 500 விக்கெட் சாதனையை இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் எட்டினார்.
வெறும் 98 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ள அஸ்வின் குறைந்த பந்துகளை (25,714) வீசி 500 விக்கெட்களை கைப்பற்றி அபார சாதனை படைத்துள்ளார் .
இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் அபாரமாக ஆடிய குட்டி புலி ஜெய்ஸ்வால் இரட்டை சத்தம் அடுத்து எதிரணியை மிரவைத்தார்.
இந்த தொடரில் மட்டும் ஜெய்ஸ்வால் பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் படைத்த சாதனைகளை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் இன்று நடைபெற்ற நாளாம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 91 ரன்கள் எடுத்த நிலையில் சதத்தை தவறவிட்டு விக்கெட் ஆனார் .
Also Read : https://itamiltv.com/anand-mahindra-gifted-a-car-to-sarfaraz-father/
பின்னர் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் மற்றும் .சர்ஃபராஸ் கான் தங்களது (3rd Test Match ) அதிரடியான ஆட்டத்தால் அணியின் ரன்களை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.