சென்னை நோக்கி வந்த லாரி, ஆம்னி மற்றும் அரசுப் பேருந்து அடுத்தடுத்து மோதி ( big accident ) விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பூந்தமல்லிக்கு கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றுள்ளது . அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து லாரியின் பின்பக்கம் அதிவேகமாக மோதியது.
இதையடுத்து முசிறியில் இருந்து கிளாம்பாக்கம் வந்த அரசு பேருந்து ஆம்னி பேருந்து மீது மோதி அடுத்தடுத்து கோர விபத்து நிகழ்ந்துள்ளது .
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மேல்மருவதூர் சேர்ந்த மருத்துவர் ராஜேஷ் ,சென்னை கொடுங்கையூர் சேர்ந்த தனலட்சுமி, பிரவீன் மற்றும் அடையாளம் காணப்படாத ஒரு பெண் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுமட்டுமின்றி 20க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
லாரி, ஆம்னி மற்றும் அரசுப் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக ( big accident ) உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.