இலங்கை மன்னார் கடற்கரை பகுதியில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 47 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை மன்னார் கடற்கரை பகுதியில் கஞ்சா புதைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மன்னார் கடற்கரை பகுதியில் இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்து பணி ஈடுபட்டிருந்தனர். அப்போது மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 47 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது
கைப்பற்றப்பட்ட கஞ்சா தமிழகத்திலிருந்து கடத்தி வரப்பட்டதாகவும், கடற்படையினர் ரோந்து வருவதைக் கண்ட கடத்தல்காரர்கள் கஞ்சாவை மண்ணுக்குள் புதைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இது குறித்து இலங்கை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.