இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் (4th Test Match) போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தீவிரமாக விளையாடி வருகிறது .
இதுவரை இருக்கும் நிலவரத்தின் படி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வைக்கிறது வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்த தொடரின் 3 ஆவது டெஸ்ட் போட்டி அஸ்வின் உள்பட பல இந்திய வீரர்களுக்கு உணர்ச்சிகரமான போட்டியாக அமைந்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .
ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று அபார சாதனையை படைத்தது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி ராஞ்சியில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது .
அனல் பறக்க நடைபெற இருக்கும் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் தற்போது வரை 17 விக்கெட்களை வீழ்த்தி தொடரின் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் பும்ரா முதலிடத்தில் உள்ளார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பெற்ற அபார வெற்றியின் மகிழ்ச்சியில் 4-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்று ராஞ்சி செல்கிறது.
Also Read : https://itamiltv.com/jayalalithaas-jewellery-coming-to-tamil-nadu/
அதேபோல் தசைப் பிடிப்பு காரணமாக 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய கே.எல்.ராகுல் முழு உடற்தகுதியை எட்டும் நிலையில் உள்ளார்.
அவர், ராஞ்சியில் நடக்கும் 4 ஆவது டெஸ்ட் போட்டியில் (4th Test Match) பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே பணிச்சுமை காரணமாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பும்ராவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டால் அணிக்கு சற்று பலவீனமாகும் என கருதப்படுகிறது .