ஜம்மு – காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 5 இராணுவ வீரர்கள் பலி..!

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான சண்டையில் ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலை அடுத்து இன்று காலை ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இந்திய ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், தீவிரவாதிகளின் தாக்குதலில் ராணுவ அதிகாரி உள்பட 5 வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ வீரர்கள் தொடர்ந்து திவிரவாதிகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். தொடர்ந்து பூஞ்ச் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

எனினும், வீரர்களின் உயிரிழப்பு குறித்து இந்திய ராணுவத் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

Total
0
Shares
Related Posts