வரதட்சனை கேட்ட புகுந்த வீட்டார்- இளம் பெண் கொலையா? தற்கொலையா?

asked-for-dowry-the-young-woman-murdered?-Suicide?
asked for dowry the young woman murdered? Suicide?

திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இளம்பெண்ணின் தற்கொலை செய்து கொண்டது  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை, இவரது மூத்த மகள் 27 வதான இலக்கியா. இலக்கியவுக்கும் கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சரவணன், ஜெயந்தி தம்பதியின் மகனான ராம் பிரகாஷ் என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்தின் போது 100 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி மற்றும் ஸ்கோடா கார் ஆகியவற்றை மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக இலக்கியாவின் பெற்றோர் வழங்கியுள்ளனர்.

திருமணத்திற்கு பின்னரும் இலக்கியாவின் மாமனார், இலக்கியா வீட்டில் இருந்து தொடர்ந்து பலமுறை நகை மற்றும் பணத்தை கேட்டுப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன வேதனை அடைந்த இலக்கியா இது குறித்து பெற்றோரிடம் கூறி வந்துள்ள நிலையில், கணவர் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததால் கடந்த மார்ச் மாதம் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

asked-for-dowry-Was-the-young-woman-murdered?-Suicide?
asked for dowry  the young woman murdered? Suicide?

இதையடுத்து ஒரு மாதம் கழித்து இலக்கியாவை போனில் அழைத்து சமாதானம் செய்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து ராம்பிரகாஷ் சென்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து ராம்பிரகாஷ் குடும்பத்தினர் மீண்டும் 5 லட்சம் பணம் கேட்டதாகவும் இலக்கியாவின் பெற்றோர் முதல்கட்டமாக ஒரு லட்ச ரூபாயை ராம்பிரகாஷ் குடும்பத்திற்கு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் நேற்று மாலை திடீரென ராம்பிரகாஷ் வீட்டில் இருந்து இலக்கியா வீட்டாரின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. செல்போனை எடுத்து பேசிய இலக்கியா வீட்டாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதில் இலக்கியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் உடனே வரும்படியும் ராம்பிரகாஷ் வீட்டினர் கூறியதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த இலக்கியாவின் பெற்றோர் கோவை சென்று பார்த்தபோது கழுத்து இறுகி இருந்த நிலையில் இலக்கியா சடலமாக இருந்துள்ளார்.

இதை கண்டு கதறி அழுத இலக்கியாவின் பெற்றோர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ராமநாதபுரம் காவல்துறையினனர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருமணத்துக்கு முன்பே வரதட்சணை கேட்டு பெற்று இலக்கியாவை திருமணம் செய்து கொண்டார்கள், பெண் நல்ல படியாக வாழவேண்டும் என்பதற்காக கேட்கும் பொருட்களையெல்லாம் கொடுத்துள்ளோம். இருந்தாலும் எங்கள் வீட்டு பெண்ணை தொடர்ந்து ராம் பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்தனர் என்று இலக்கியாவின் பெற்றோர் கதறுவது பார்ப்பவர்களை கண் கலங்க வைத்துள்ளது.
திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இளம்பெண்ணின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Total
0
Shares
Related Posts