தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 16வது நாளான இன்று பாடை கட்டி ஒப்பாரி வைத்து நூதண முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,
100 நாட்கள் கூலி, பிரதமர் பென்சன், முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவி தொகையை, வீடு கட்ட கொடுக்கும் பணத்தை வங்கிகள் விவசாய கடன் பாக்கிக்காக பிடிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அய்யாகண்ணு..
தொடர்ந்து 16-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மத்திய அரசு உரிய விலை கொடுக்கவில்லை, நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழகத்தில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் அதையே அரசு தடுத்து நிறுத்தவில்லை, மத்திய அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார்.
விவசாயிகள் கஷ்டப்பட்டு வெளிச்சம் செய்தால் அதனையும் வங்கி அதிகாரிகள் கடனுக்காக மிரட்டி பிடுங்கி செல்கின்றனர், இதுவரை இந்தியா முழுவதும் 5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
விவசாயிகளின் தற்கொலையை வெளிப்படுத்தும் வகையில் இன்று நாங்கள் பாடை கட்டி ஒப்பாரி வைக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தார்.