நேபாளத்தில் மலையேற்றத்தின்போது மாயமான 5 ரஷிய வீரர்கள் மாயமான நிலையில், அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியா, நேபாளம் இடையே உள்ள இமயமலையின் சிகரங்களில் ஏற உலகம் முழுவதிலும் இருந்து வரும் மலையேற்ற வீரர், வீராங்கனைகளும், சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 6ஆம் தேதி ரஷியாவை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் நேபாளத்தில் இருந்து இமயமலையின் தளகிரி சிகரத்தை நோக்கி பயணத்தை தொடங்கினர்.
அவர்கள் தங்கியிருந்த முகாமில் இருந்து காலை 6 மணிக்கு பயணத்தை தொடங்கிய வீரர்களின் ரேடியோ தொடர்பு காலை 11 மணியளவில் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மாயமான மலையேற்ற வீரர்களை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க : தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலை சட்டத்தை உடனே நிறைவேற்றிடுக- ராமதாஸ்!!
இந்நிலையில் தற்போது மாயமான 5 மலையேற்ற வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் நடைபெற்ற தேடுதல் பணியின்போது மலையின் 7 கிலோமீட்டர் உயரத்தில் 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மலை சிகரத்தில் இருந்து கீழே விழுந்து 5 வீரர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.