திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தில் ஆந்திர அரசு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் 50 திரையரங்குகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு அங்குள்ள திரையரங்குகள் குறைந்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்திருந்தது.
அதன்படி டிக்கெட் விலையை 10 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்க வேண்டும் என திரையரங்குகள் நிர்பந்திக்கப்பட்டன. இந்த கட்டண குறைப்பால் சமீபத்தில் வெளியான பாலகிருஷ்ணாவின் அகண்டா, அல்லு அர்ஜுனின் புஷ்பா படங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேற்கு கோதாவரி பகுதியில் மட்டும் சுமார் 50 தியேட்டர்கள் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் சிரஞ்சீவி, நானி உள்ளிட்ட நடிகர்கள் ஆந்திர அரசின் அறிவிப்புக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த கட்டண குறைப்பால் நடிகர்களின் சம்பளமும் வெகுவாக குறையும் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.