புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் அங்குள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயலால் ஏற்பட்ட கனமழையில் தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
புதுச்சேரியில் வரலாறு காணாத கனமழையால் அங்கு உள்ள பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுவதுடன் அன்றாட தேவைகள் கூட அவர்களால் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
Also Read : அமெரிக்காவின் FBI இயக்குநராக காஷ் படேல் நியமனம்..!!
இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
விவசாய நிலம் ஹெக்டர் ஒன்றுக்கு ₹30,000 வழங்கப்படும். வெள்ளத்தில் உயிரிழந்த ஒரு மாட்டுக்கு ₹40,000, இளம் கன்றுக்குட்டிக்கு ₹30,000 வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ₹20,000 மற்றும் வீடுகளுக்கு ₹10,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்