உத்தரபிரதேச மாநில லகிம்பூர் மாவட்டத்தில் உள்ள நிகாசன் பகுதிக்குட்பட்ட லால்பூர் மஜ்ரா தமோலி பூர்வா கிராமத்தில், நேற்று மாலை 2 தலித் சிறுமிகள் கொலை செய்யப்பட்டு கரும்பு தோட்டத்தில் உள்ள ஒரு மரத்திலிருந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டனர். ஒரு சிறுமிக்கு 17 வயதும் மற்றொரு சிறுமிக்கு 14 வயதாகிறது. இவர்கள் இருவரும் சகோதரிகளாவர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுமிகளின் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 2 சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், சிறுமிகளை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். சோட்டு, ஜுனைத், சுஹைல், ஹஃபிசுல், கரிமுத்தீன் மற்றும் ஆரிஃப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், சோட்டு என்பவன் சிறுமிகளை அவனது மற்ற நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தியதாகவும், அதில் ஒரு சிறுமியை குற்றவாளிகளில் ஒருவன் திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், சிறுமிகளை கடத்தவில்லை எனவும், அந்த சிறுமிகளாகவே தான் வந்தார்கள் எனவும் குற்றவாளிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை சிறுமிகள் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச அரசை கடுமையாக சாடியுள்ளார். மேலும், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தை ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, உ.பி.யில் “பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் என்ன ?செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகும் தவறான விளம்பரங்கள் சட்டம் ஒழுங்கு நிலைமையை மேம்படுத்தாது ” என ட்வீட் தெரிவித்துள்ளார்.
लखीमपुर (उप्र) में दो बहनों की हत्या की घटना दिल दहलाने वाली है। परिजनों का कहना है कि उन लड़कियों का दिनदहाड़े अपहरण किया गया था।
रोज अखबारों व टीवी में झूठे विज्ञापन देने से कानून व्यवस्था अच्छी नहीं हो जाती।आखिर उप्र में महिलाओं के खिलाफ जघन्य अपराध क्यों बढ़ते जा रहे हैं? pic.twitter.com/A1K3xvfeUI
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 14, 2022
மேலும் சமாஜ்வாடி கட்ச் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், இந்த சம்பவத்தை “ஹத்ராஸின் கொடூரமான சம்பவம் “ என குறிப்பிட்டிருக்கிறார் . மேலும் ””நிகாசன் காவல் நிலையப் பகுதியில் இரண்டு தலித் சகோதரிகளைக் கடத்திச் சென்று கொலை செய்திருக்கின்றனர். பிறகு காவல்துறையினர் தந்தையின் அனுமதி இல்லாமல் பெண்களின் உடலை உடற்கூறாய்விற்கு அனுப்பியிருக்கின்றனர்.லக்கிம்பூரில் விவசாயிகளுக்குப் பிறகு, தலித்துகள் கொல்லப்படுவது இப்போது ‘ஹத்ராஸ் கி பேட்டி’ படுகொலையின் கொடூரமான மறுநிகழ்வு ஆகும்” என குறிப்பிட்டுள்ளார்.
निघासन पुलिस थाना क्षेत्र में 2 दलित बहनों को अगवा करने के बाद उनकी हत्या और उसके बाद पुलिस पर पिता का ये आरोप बेहद गंभीर है कि बिना पंचनामा और सहमति के उनका पोस्टमार्टम किया गया।
लखीमपुर में किसानों के बाद अब दलितों की हत्या ‘हाथरस की बेटी’ हत्याकांड की जघन्य पुनरावृत्ति है। pic.twitter.com/gFmea4bAUc
— Akhilesh Yadav (@yadavakhilesh) September 14, 2022
டெல்லியில் இருந்து 200 கி. மீ தொலைவில் உள்ளது ஹத்ராஸ். கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி அன்று, 19 வயது பட்டியலின இளம்பெண் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவரை அலிகர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அதே வருடம் செப்டம்பர் 29-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பூதாகரமான இந்த விவகாரத்தில் காவல்துறை நள்ளிரவில் உடலை அவசர அவசரமாக தகனம் செய்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிக்கையாளர் சித்திக் காப்பன், கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த அதிக்குர்ரஹ்மான், உள்ளிட்டோரை உத்தரபிரதேச அரசு UAPA சட்டத்தின் கீழ் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், லகிம்பூரில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.