புத்தாண்டு கொண்டாட்டத்தில் கடலில் தடையை (Ban ) மீறி குளித்த 7பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டில் கடற்கரைப் பகுதிகளில் பொது மக்கள் ஒன்று கூடுவது வழக்கமான ஒன்றாகும். இதனால், கூட்ட நெரிசல் மற்றும் கவன குறைவால் உயிர் இழப்புகள் ஏற்படுவது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எனவே, இதனைத் தடுப்பதற்காக சென்னை மெரினாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31.12.23) இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை சென்னை மாநகர போலீசார் தடை விதித்தனர். அதேபோல் பைக் ரேஸ் செய்தாலோ, மதுபோதையில் வாகனங்களை இயக்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்திருந்தனர்.
மேலும் ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மேல் ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை (Ban ) விதித்து, இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்திருந்தனர். கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும், கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடலில் குளிக்கும் மக்களின் கவன குறைவால் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றனர். அந்த வகையில் இந்த வருடமும் தமிழகத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிங்க : https://itamiltv.com/all-the-work-required-by-the-people-at-kilambakkam-bus-terminus-will-be-done-by-pongal-minister-p-k-sekar-babu/
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர், உத்தண்டி கடற்கரையில் காலைப்பொழுதில் கடலில் மூன்று நண்பர்கள் இறங்கி குளிக்கும் போது எதிர்பாராத விதமாக இராட்சத அலையில் சிக்கி மூவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஈஞ்சம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர் . ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவர் கானத்தூர் அருகே சடலமாக கரை ஒதுங்கினார்.

இதனை அடுத்து , போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் சிக்கியவரில் ஒருவர் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜா (25)என்றவரும் இவர், ஐடி ஊழியர் எனவும் தெரியவந்தது. மற்றொருவர் திருக்கோவிலூரை சேர்ந்த தாமோதரன் என்பதும் தெரியவந்தது. இதில், உயிருடன் மீட்கப்பட்ட ஹரிஹரன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.
மேலும், கடற்கரையில் புத்தாண்டு நேரத்தில் குளிக்க,போலீசார் தடை விதித்திருந்த நிலையில், தடையை மீறி குளித்த இருவர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கானத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் கடந்த 30 ஆம் தேதி கடற்கரையில் குளித்த போது இழுத்துச் செல்லபட்டு காணாமல் போன சோழிங்கநல்லூரை சேர்ந்த பிரகாஷ் (20), என்பவர் இன்று அதிகாலை உத்தண்டி கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கினார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதைபோல் , புதுச்சேரியில் நேற்று முந்தினம் புத்தாண்டையொட்டி பழைய துறைமுக கடல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நெல்லித்தோப்பு டி.ஆர்.நகரைச் சேர்ந்த சீனிவாசன் – மீனாட்சி தம்பதியினரின் மகள்களான மோகனா (16), லேகா (14) ஆகிய இருவரும், கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த நவீன் (16) மற்றும் அவரது நண்பர் கிஷோர் (16) ஆகிய நான்கு குழந்தைகளும் மாயமாகின. குழந்தைகளை பற்றிய தேடுதல் வேட்டையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.