ஒடிசா மாநிலத்தில் பயங்கர தலைவலியால் சிகிச்சைக்கு சென்ற 19 வயதான இளம் பெண்ணின் தலையில் 77 ஊசிகள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அரண்டுபோன சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் மாந்திரீகம் என்ற பெயரில் ரேஷ்மா (19) என்பவரின் தலையில் 77 ஊசிகளை சாமியார் ஒருவர் ஏற்றியுள்ளார் . இதையடுத்து கடும் தலைவலியால் அப்பெண் அவதிப்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து சிகிச்சைக்காக அப்பெண் மருத்துவர்களை நாடியுள்ளார் . பெண்ணின் தலையில் இத்தனை ஊசிகளை கண்ட மருத்துவர்கள் ஊசிகளை அகற்றி பெண்ணின் உயிரை காப்பாற்றினர்.
Also Read : வீட்டில் பதுக்கப்பட்ட பழங்கால சிலைகள் – தட்டித்தூக்கிய காவல்துறை..!!
சாமியார் ஏற்றிய ஊசிகள் அனைத்தும் ரேஷ்மாவின் எலும்புகளை பாதிக்காமல், சதைகளில் குத்தியுள்ளதால்
அறுவை சிகிச்சைக்கு பின் ரேஷ்மா தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
தாயின் மறைவுக்கு பின் மனதளவில் பாதிக்கப்பட்ட ரேஷ்மா சாமியாரை நாட, அவர்
இவ்வாறு செய்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு பின் உண்மை வெளிவந்ததால் சாமியாரை கைது செய்து, வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.